Categories
உலக செய்திகள்

தலைக்கேறிய கோபம்…. கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு…. பறிபோன மூன்று உயிர்….!!

அமெரிக்காவில் மகள் மற்றும் மாமியாரை கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் பூபிந்தர் சிங். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு 14 வயதில் ஜஸ்லீன் கவுர் என்ற மகள் உள்ளார். இவருடைய மாமியார் மன்ஜித் கவுர். சம்பவத்தன்று  பூபிந்தர் சிங் வீட்டில் இருந்த போது அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போனதால் ஆத்திரமடைந்த பூபிந்தர் சிங் வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் பூபிந்தர் சிங்கின் மகள் ஜஸ்லீன் கவுர், மற்றும் மாமியார் மன்ஜித் கவுர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த கொடூரமான துப்பாக்கி சூட்டில் அந்த வீட்டில் இருந்த ராஸ்பல் கவுர்  என்ற ஒரு பெண்ணும் படுகாயமடைந்தார்.

இவர் பூபிந்தர் சிங்கிற்கு எந்த உறவு என்று தகவல் தெரியவில்லை. எனினும் அவர் கையில் குண்டு காயத்துடன் வீட்டில் இருந்து தப்பி ஓடி வந்துள்ளார். இதை தொடர்ந்து பூபிந்தர் சிங் துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே பூபிந்தர் சிங்கின் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தின் பின்னனி என்ன என்பது குறித்து நியூயார்க் மாகாண காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |