Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளை காதலித்த டிரைவர்…. தந்தையின் கொடூர செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் வேட்டமங்கலம் கீழத்தெருவில் இளங்கோவன் மகன் பிரபாகரன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இதில் பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் மணிகண்டனின் மகளை காதலித்ததாக தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சிபுரம் கடைவீதியில் பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் மணிகண்டன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பிரபாகரனை சரமாரியாக குத்தி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரனின் சகோதரரான விக்னேஷ் அவரை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது விக்னேஷ்க்கும் கத்திக் குத்து விழுந்து காயமடைந்தார். அதன்பின் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி விக்னேஷ் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் இதில் பிரபாகரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Categories

Tech |