தனது மகளை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் 45 வயதான Jamie Markham என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் Jamieயின் மகளை ஒரு கும்பல் வெகு நாட்களாக கேலி செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர். இது குறித்து அறிந்த Jamie அந்த கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபன் கடந்த திங்கட்கிழமை இரவு அன்று Jamieயின் வீட்டின் முன்பு வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
இதனை தொடர்ந்து Jamie அலறும் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள்கள் வெளியே ஓடிவந்துள்ளனர். மேலும் அவரின் மனைவி மருத்துவ அவசர உதவியை அழைத்துள்ளார். ஆனால் Jamie மருத்துவக் குழுவினரின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் சி.சி.டிவி காணொளி காட்சிகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.