மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவமனை அலுவலகத்தில் தரையில் படுத்து உறங்கியுள்ளார்.
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் பார்மிங்க்டோன் பகுதியில் ஜோ டங்கன் சாரா டங்கன் ஆகியோர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுனராகவும் சாரா டங்கன் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அப்பொழுது திடீரென அவர்களின் இளைய மகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சாரா ஜோவிற்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் தனியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி நானும் வந்துவிடுகிறேன் என்று அலுவலகத்திலிருந்து அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார். ஜோ டங்கன் பணி சுமை காரணமாக 12 மணி நேர வேலையைப் பார்த்துக் கொண்டு வருகிறார். மேலும் சற்றும் ஓய்வில்லாமல் குழந்தையின் நலனை கருதி மனைவியையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் பயணம் செய்து அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் இவர்களின் மகளுக்கு மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஜோ 12 மணி நேரம் ஓய்வில்லாமல் வேலை பார்த்ததினால் கலைப்போடு இருந்தார். அதனால் அவர் குழந்தையின் பேபி சீட்டின் மேல் தலை வைத்து, மருத்துவமனை தரையிலேயே படுத்து சிறிது நேரம் அயர்ந்து உறங்கியுள்ளார்.
இதனை தனது செல்போனில் புகைப்படம் பிடித்து மனைவி சாரா அவரின் முகநூல் பக்கத்தில் ‘இந்த வாழ்க்கையை உன்னைத்தவிர நான் வேற யாருடன் வாழ விரும்பவில்லை காதலான கணவரகவும், அன்பான அப்பாவிற்கும் நன்றி’ என காதலோடு உருக்கமாகக் கூறி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அனைவரும் ஜோ டங்கனை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.