பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது மகளுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் . குறிப்பாக விவசாயம் குறித்து அறிவுரைகள் கூறி வருகிறார் . இந்நிலையில் இன்று ஆரி தனது மகள் ரியாவின் பிறந்தநாளுக்கு விதைகளை பரிசாக கொடுத்ததாக சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
Happy birthday Riya.
A seed today is a food source for tomorrow. Naanum Oru Vivasayi..
Let's grow our own food needs. Our little terrace gardening.. #Marvommaatruvom pic.twitter.com/sRu9EmbhUk— Aari Arujunan (@Aariarujunan) February 5, 2021
அதில் ‘இன்று நாம் விதைக்கும் ஒரு விதை நாளைய உணவுக்கான மூலதனம். நானும் ஒரு விவசாயி . நம்முடைய உணவுத் தேவைகளை நாமே வளர்த்துக் கொள்வோம் . எங்கள் வீட்டில் ஒரு சிறிய மாடி தோட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார் . மேலும் அந்த விதைகளை ரியா விதைக்கும் புகைப்படத்தையும் ஆரி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . இதையடுத்து சிறிய வயதிலேயே தன் மகளுக்கு விவசாயம் பற்றிய அறிவை கற்பித்து வரும் ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .