மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது .
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும் நடைபெறுகின்றது .இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளன.60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு சிறந்த 33 வீராங்கனைகள் இறுதியாக அடுத்த கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் .அதோடு இந்த பயிற்சி முகாமில் தேசிய அளவிலான போட்டியில் சிறந்து விளையாடிய வீராங்கனைகளும், இந்திய சீனியர் அணியில் இடம் பெற்றிருக்கும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர் .
இதுகுறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளரான ஜன்னெகே ஸ்கோப்மேன் கூறும்போது,” புதிய வீராங்கனைகளின் திறமையும் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அதோடு அடுத்த சில வாரங்கள் மிகவும் அற்புதமாக இருக்கப் போகின்றது .அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் முக்கிய போட்டிகளுக்கும் சிறந்த 33 வீராங்கனைகளை தேர்வு செய்வது மிக முக்கியமானதாகும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.