செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மகளிர் கோப்பை டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது . இப்போட்டியில் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த அனெட் கொன்டாவெய்ட் சாம்பியன் பட்டம் வென்றார்.இதன்மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 20 உள் அரங்க போட்டிகளை வெல்லும் 6-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 26 வயதான அனெட் கொன்டாவெய்ட் (5-7, 7-6 (7/4), 7-5) என்ற செட் கணக்கில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது 6-வது டென்னிஸ் பட்டம் ஆகும். அவர் பெற்ற 6 பட்டங்களில் கடைசியாக பெற்ற 5 பட்டங்கள் கடந்த 7 மாதங்களில் நடத்த தொடர்களில் பெற்றவை ஆகும். அதோடு உலக தரவரிசையில் டாப் 10-க்குள் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார்.