Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. இவ்வளவு ரூபாய் கடன் வழங்க இலக்கு…. கலெக்டரின் தகவல்….!!

நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் கூறியபோது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எனவே நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும்  சாலையோர வியாபாரிகளுக்கு உரிய கடன் வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |