நடிகர் மாதவன் தனது குடும்ப புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் மாதவன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Happy women’s day …from 3 very grateful and indebted men… Cause for us every day is a women’s day. ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/BCCNIbdAs7
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 8, 2021
இந்நிலையில் இன்று நடிகர் மாதவன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து தனது குடும்ப புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மாதவன் அவரது மனைவி, மகன் மற்றும் தாய் ,தந்தை ஆகியோருடன் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.