மகளிர் உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 41 ரன்னும் , மரிசான் கேப் 42 ரன்னும் குவித்தனர். வங்காளதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட் கைப்பற்றினார்.இதையடுத்து 208 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு வங்காளதேச அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷாமிமா சுல்தானா – ஷார்மின் அக்தர் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.இதில் பின் சுல்தானா 27 ரன்னில் ஆட்டமிழக்க, அக்தர் 34 ரன்னில் வெளியேறினார் . இதன் பிறகு களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.இறுதியாக வங்காளதேச மகளிர் அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 175 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.