மகனை இழந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் பழனிச்சாமி-வசந்தாமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்த ஒரு மகன் இருந்தார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த வசந்தாமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் வசந்தாமணியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தாமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தாமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.