Categories
உலக செய்திகள்

மகன் இறந்த துக்கத்தில் இதனை செய்தேன்…. நெகிழ்ச்சியுடன் கூறிய இந்தியர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் விபத்து ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து அவர் நினைவாக தந்தை செய்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற அவலம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அது கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.இந்தநிலையில் அரபுநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற கேரளாவைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு கேரளாவிற்கு அனுப்பி வைப்பதற்கு டிஎன் கிருஷ்ணகுமார் என்பவர் உதவி செய்துள்ளார். துபாயில் கடந்த 32 ஆண்டுகளாக இருந்து வரும் அவர், தனது மாநில மக்களுக்கு உரிய நேரத்தில் உதவி இருக்கிறார். அரபு நாடுகளில் இருந்து கேரளா செல்வதற்கு சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த சிறப்பு விமானங்கள் அனைத்திலும் கட்டணம் மிக அதிகமாக இருந்த காரணத்தால் அந்த விமானத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் பலர் இருந்துள்ளனர். அப்படி டிக்கெட் எடுக்க கூட பணம் இல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருந்த நபர்கள் அனைவரையும் தேடிப்பிடித்து டிஎன் கிருஷ்ணகுமார் என்பவர் உதவியிருக்கிறார். அவ்வாறு மொத்தம் 61 நபர்களை தேர்வு செய்திருக்கிறார்.

முதலில் 6 நபர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அவர்கள் அனைவரும் சொந்த ஊர் செல்வதற்கு உதவி செய்துள்ளார். அதன் பின்னர் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கல்லூரியில் அலுமினி வாட்ஸ்அப் குருப்பில் அதனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதன் பின்னர் குழுவில் இருந்த அனைவரும் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் வந்துள்ளனர். மொத்தம் 197 நபர்களை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்ப திட்டமிட்டனர். இதற்கு முன்னதாக 6 பேரை இவர் ஊருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், தற்போது 55 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்காக தனது சொந்தப் பணம் 14 லட்சத்தை செலவு செய்துள்ளார். பிளைதுபாய் என்ற விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 25ஆம் தேதி கேரளா அனுப்பப்பட்ட அனைவரும் தற்போது கொச்சியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை பற்றி அவர் கூறும்போது, மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்ததாகவும், என்னுடைய மகன் கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்து விட்டான். அவன் நினைவில் தான் இவர்கள் அனைவருக்கும் உதவி செய்தேன். அரபு நாடுகளில் இந்தியர்கள் பெரும்பாலானோர் இவ்வாறு சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும். அவர்களுக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லை. அதனால் அவர்களுக்கு உதவ சிந்தித்தேன். நான் மட்டும் இப்படி உதவவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. என்னுடன் இணைந்து பலரும் உதவி செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |