Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த துக்க செய்தியை கேட்ட தாய் மரணம்”… திருச்சி அருகே நடந்த சோக சம்பவம்…!!

மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(60) . இவர் அங்குள்ள கிராம புறத்தில் மாட்டு வைத்தியராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகராஜின்  பெற்றோர்கள் கண்ணனூர் சாலையில் வெற்றிலை, பாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயின் கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு கனகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கனகராஜை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கனகராஜ்  ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கனகராஜின் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது.

இதற்கிடையே கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கனகராஜின்  தாய் சரஸ்வதி அம்மாள்(81)  தனது மகன் கீழே விழுந்ததை பார்த்த அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது  மகன் இறந்த செய்தியைக் கேட்டு மகனின் முகத்தை பார்த்து அவர் அதே இடத்தில் மயக்கம் போட்டு உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |