நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர் கட்டிட தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரின் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதன் பிறகு தன் மகனின் மறைவு காரணமாக சுரேஷ் ஆழ்ந்த துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவர் தனிமையில் இருந்த நிலையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.