மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தஉடையான்பட்டியை சேர்ந்த கிலாரியணா நாகசெல்வி இவர் பள்ளமேடு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வேகத்தடையை கடந்து சென்ற போது இருசக்கர வாகனத்திலிருந்து கிளாரியனா நாகசெல்வி தவறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. இதில் மகன் கண் முன்னே தாய் துடிதுடித்து உயிரிழந்தார். செல்வி தவறிவிட்டார் அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் மகன் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.