புற்று நோய் பயத்தால் பெண் தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள isle of dogs என்ற பகுதியை சேர்ந்தவர் யூலியா (35). இவரது கணவர் மஹ்மட். இவர்களது மகன் கைமூர் 7 . இந்நிலையில் யூலியா திடீரென தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தைமூர் குளியலறை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் யூலியா படுக்கை அறையில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரித்ததில் யூலியாவிற்கு மார்பகப் புற்றுநோய் இருந்துள்ளது. இதனால் தனக்கு மார்பக பகுதியில் மிகவும் வலி ஏற்படுவதாக அவரது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தன் கணவரிடம் விவாகரத்து பெற்று மகனுடன் ரஷ்யாவிற்கு செல்ல போவதாக தன் மனநல ஆலோசகரிடம் யூலியா கூறியுள்ளார்.
மேலும் யூலியாவின் கணவர் மெஹ்மட் யூலியாவை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் மஹ்மட் பிரிட்டானிய துருக்கியர் என்பதால் யூலியாவை ரஷ்ய மொழியில் பேசக்கூடாது என்று கூறி சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து யூலியாவின் கணவர் மஹ்மட் கூறுகையில், தனக்கு தெரியாத ரஷ்ய மொழியில் யூலியா மற்றும் அவரது தாய் இருவரும் சேர்ந்து திட்டுவார்கள். இதனால் நான் தனிமையில் விடப்பட்டது போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் யூலியாவிற்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் அவர் உயிர் பிழைக்க 97% வாய்ப்பு இருந்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இருப்பினும் யூலியா உயிர்பிழைக்க 3% வாய்ப்பு இல்லாததால் தாம் இறந்துவிடுவோமோ என்று தேவையற்ற அச்சத்தால் தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்துவிட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.