Categories
உலக செய்திகள்

மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஆடையின்றி விழாவில் கலந்துகொண்ட தாய்….10 லட்சம் அபராதம்….!!!

கானா நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் தனது மகனின் பிறந்தநாளிருக்கு ஆடையின்றி வந்து புகைப்படம் எடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கானா நடிகை ரோஸ்மண்ட் பிரவுன் மகனின் 7 வது பிறந்தநாளை  கடந்த ஜூலை மாதம் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் தன் மகனின் பிறந்த நாள் விழாவில் அனைவர் முன்பும் ஆடையின்றி மண்டியிட்டு மகனின் கையைப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது அவருக்கு  3 மாத சிறை தண்டனை  வழங்கினார்.இதை  கேட்ட நடிகை கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.இந்த தண்டனைக்கு சிலர் ஆதரவாகவும் பலர் எதிராகவும் விமர்சனம் செய்தனர் .

மேலும் வழக்கை மேல்முறையீடு செய்து  ஜாமீன் வழங்குமாறும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் முதல் முறை குற்றவாளி என்பதாலும் அவரது மகனின் நலனைக்கருத்தில் கொண்டும் ரூ.10 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்குமாறு நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

Categories

Tech |