நடிகர் விஜய் தனது மகனுடன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. கடந்த வருடம் வெளியாக இருந்த இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் விஜய்யுடன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .
நடிகர் விஜயின் மகனான சஞ்சய் ஜங்ஷன், சிரி போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார் . இதையடுத்து சில காலம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். நடிகர் விஜய் போக்கிரி , வேட்டைக்காரன் ஆகிய படங்களில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு தன் மகன் சஞ்சய்யுடன் இணைந்து நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.