தனது ஏழு வயது சிறுவனுக்காக பனிவீடு ஒன்றை கட்டி எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது.
ஸ்விட்ஸர்லாந்தில் டரஸ்ப் என்ற பகுதியில் தன் 7 வயது மகனுக்காக தந்தை ஒருவர் பனிவீடு ஒன்றை கட்டியுள்ளார். அதில் தந்தையும் மகனுமாய் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் அந்த வீடு நிலைகுலைந்துள்ளது.அதனால் தந்தை ,மகன் இருவர் மீதும் பணி முழுவதும் விழுந்து அதில் சிக்கி தவித்துள்ளனர். பின் தந்தை மட்டும் எப்படியோ போராடி வெளியே வந்துள்ளார் .ஆனால் தன் மகனை காணவில்லை.
மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகனை 15 நிமிடத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். மயக்க நிலையில் இருந்த குழந்தைக்கு முதலுதவி செய்ய மருத்துவ குழுவினரும் வந்து சேர அவர்கள் ஹெலிகாப்டர் மூலம்சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளான் . இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.