மகர ராசி அன்பர்களே…!! இன்று அன்பானவர்கள் ஆலோசனை உங்களுக்கு நல்வழியைக் காட்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும்.
வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல நேரிடும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களால் வீண் வாக்குவாதங்களில் கொஞ்சம் ஏற்படலாம். உங்களுடைய சாதுர்யமான பேச்சு மூலம் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள், வெற்றி வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். தாராள அளவிலேயே பணவரவும் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கு அதிஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்டமான எண்: 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.