மகரம் ராசி அன்பர்கள், இன்று எங்கள் குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால், கோபம் எரிச்சல் கொஞ்சம் அடையலாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும் . உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு . வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியரிடம் நிதானமாக பேசுவது நல்லது.
. கூடுமானவரை வாக்குவாதம் மட்டும் ஏதும் வேண்டாம் . அக்கம் பக்கம்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் செயல்பாடுகளில் நன்றாகவே மாற்றம் தெரியும். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் . இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். முன்னேற்றமான சூழல் இருக்கும். ஆசிரியரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஊதா நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஊதா