Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… பகை மாறும்..உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்..!!

மகரம்  ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். செயல்களில் திறமை நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர் பாராட்டி உங்களை ஊக்கப்படுத்துவார்கள். வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று குடும்பத்தில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். இன்று எதற்கும் கவலை வேண்டாம், மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. இன்று நீங்கள் பிறரிடம் பேசும்பொழுது நிதானத்தைக் கடைபிடியுங்கள். வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது. அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |