மகர ராசி அன்பர்களே …!! இன்று வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் நீங்கள் சந்திக்க நேரலாம். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகமாக செலவாகும். போக்குவரத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் இன்று ஒரு முடிவை கொடுக்கும். புதிய நண்பர்கள் கிடைக்க கூடும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மிக முக்கியமாக யாரை நம்பியும் இன்று நீங்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுடைய ரகசியங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
பொறுமையாகவும் நிதானமாகவும் எப்பொழுதுமே செயல்படுங்கள். தனவரவு ஓரளவு காலதாமதம் இருந்தாலும் கையில் வந்து சேரும்.காதலர்கள் என்று வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருந்தால் போதுமானதாக இருக்கும்.இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.