மகர ராசி அன்பர்களே …! கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும்.
அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கட்டளையிடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.நிதி மேலாண்மையில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று எந்த செயலிலும் காரணமின்றி ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்