மகர ராசி அன்பர்களே …! இஷ்ட தெய்வ அனுகிரகம் பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் இன்று அமையும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மனமகிழ்ச்சி ஏற்படும்.
தெய்வ வழிபாடு செய்யுங்கள் காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சகல காரியங்களை செய்யுங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.