Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பணிச்சுமை அதிகரித்தாலும்,பாராட்டுகளை பெறுவீர்கள்….

 

மகரம் ராசி அன்பர்களே… இன்று தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள்.வாழ்க்கை துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

எதிர் பார்த்தபடி சரக்குகளும் விற்பனையாகும்.போட்டி விற்பனையாளர்கள் விலகிச்செல்வார்கள். குழந்தைகளின் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ரசுப் பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.வேலைதேடும் இளைஞர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.உறவினர் வகையில் தொந்தரவுகள் இருந்தாலும் கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள்.

தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்துவார்கள்பார்த்துக்கொள்ளுங்கள்.நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.இன்று கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் கவனமாகவே  இருங்கள்.உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பாகும். இளம் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.

அதுபோலவே இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |