மகர ராசி அன்பர்களே …! இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு இருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகளை பற்றிய சிந்தனை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
எப்பொழுதும் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து நீங்கள் அதற்காகவே கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கான காலம் நெருங்கி விட்டது என்பதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அனைத்து விஷயங்களிலும் சுமுகமான தீர்வு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள், பெரியோரின் ஆலோசனை உங்களுக்கு நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தினால் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும்.
ஆனால் காதலர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத விஷயத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.