Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…திறமை வெளிப்படும்…தேவைகள் பூர்த்தியாகும்…!

மகர ராசி அன்பர்களே …!   உயர்கல்வி தேவைகள் பூர்த்தியாகும் நாள். உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இன்று காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி கூடும். விட்டுக்கொடுத்து வாழ்வது மூலம் சிறப்பான பலன்களை பெறக்கூடும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருப்பதால் உள்ளம்  மகிழ்ச்சியாகவே காணப்படும். பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும்.

இன்று எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம் படபடப்பு குறையும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்விர்கள். இதனால் நல்ல பலன்கள் அடையக்கூடும். காரிய வெற்றிக்கு குல தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். காதல் கைகூடி நல்ல முன்னேற்றம் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |