Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…திறமை வெளிப்படும்…வெற்றி உண்டு…!

மகர ராசி அன்பர்களே …!     இன்று சந்தோஷமான வாய்ப்புகளை நீங்கள் சந்திக்க கூடும். எந்த ஒரு விஷயத்தையும் திறமையாக கையாண்டு வெற்றி கொள்வீர்கள். பொது வாழ்க்கையில் புகழும் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பணவரவு தாராளமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் அனுகூலம்  கொஞ்சம் இருக்கும். கூடுமானவரை உடல் ஆரோக்கியம் மட்டும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் உடல்சோர்வு ஏற்படும். கடுமையான உழைப்பு இருந்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உங்களை தேடி வரக்கூடும். அதே போல கணவன் மனைவிக்கு இடையே பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

அனைத்து விஷயமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். இன்று காதலர்களுக்கு பொன்னான நாளாக அமையும். அனைத்து விஷயங்களும் ஒத்துப்போகும் மகிழ்ச்சியாகவே காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |