Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…அலைச்சல்கள் அதிகரிக்கும்…கடன்கள் வாங்க வேண்டாம்…!

மகர ராசி அன்பர்களே …!      அலைச்சல்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழில்  நன்றாக நடைபெற குலதெய்வத்தை வழிபடுங்கள். சொந்த பந்தங்கள் வழியில் சுப செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் தொடர்பான கடித போக்குவரத்தால்  நன்மை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

உச்சத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சல் சந்திக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். இதனால் உங்களுக்கு செல்வாக்கு மிகுந்த நாளாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று  பெரிய மனிதர்களை நீங்கள் சந்திக்கக்கூடும்.

அதேபோல புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டு. தயவுசெய்து புதிய கடன்களை மட்டும் வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |