Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… செலவுகள் ஏற்படும் …அலட்சியம் வேண்டாம் …!

மகர ராசி அன்பர்களே …!    இன்று அனுசரித்து செல்லும் நாளாக அமைகிறது. சொல்வதை முழுமையாக கவனித்து அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். யாரைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாகும்.

வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்பது உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். எதை பற்றியும் நீங்கள் தேவையில்லாமல் சிந்தித்துக் கொண்டிருக்காமல் தாய்க்கு மட்டும் உதவி செய்யுங்கள். வாகனத்தில் செல்லும்போது நிதானமாகவே செல்லுங்கள். வாகன பராமரிப்புச் செலவும் இன்று இருக்கும்.

இன்று தயவுசெய்து ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். செலவை நீங்கள் கட்டுப்படுத்தி விட்டால் அனைத்து விஷயங்களும் ஓரளவு நன்மை ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் தயவுசெய்து அலட்சியம் காட்டவேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |