மகர ராசி அன்பர்களே …! இன்று அனைவரிடமும் சிந்தித்து பேசவேண்டிய நாளாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் இருக்கும். தொழில் தொடர்பான பயணங்களை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது. மருத்துவ செலவுகள் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகள் போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவீர்கள். நீண்ட காலமாகவே இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். நிதி மேலாண்மையில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். யாரையும் நம்பி எந்த ஒரு விஷயத்தையும் இன்று நீங்கள் செய்ய வேண்டாம். அதே போல நீங்களும் யாரையும் இன்று குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமை காக்க வேண்டும்.
காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். எப்பொழுதும் போலவே தேவையில்லாத விஷயத்திற்காக வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்மஞ்சள் எப்பொழுதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.