மகர ராசி அன்பர்களே …! குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள். பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை அணிகலன்கள் புதிதாக வாங்கும் நிலை உண்டு. சிலரின் பொறாமை கூடும்.
உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் இயங்கும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். மற்றவர்களுக்கு இன்றைக்கு எந்தவித உதவியும் செய்ய வேண்டாம். மிக முக்கியமாக யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அதேபோல பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் போலவே ஒரு கண் இருக்கட்டும்.
தேவையில்லாத உணவுகளை உண்டு சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாகும். காதலர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.