Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மன சோர்வு ஏற்படும்…சோதனை நீங்கும்…!

மகர ராசி அன்பர்களே …!    சோதனைகளை வென்று சாதனை படைக்கும் நாளாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவி செய்வார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பாராத வகையில் நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளரிடம் நிதானத்தை கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செய்வீர்கள். அதனால் மன சோர்வு ஏற்படும். கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்தால் இந்த பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணி நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |