மகர ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. மனதிற்கு இதமான செய்திகள் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும்.
வெளியூர் செல்ல நேரிடும். பணிகள் துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் நம்பிக்கையுடன் இருங்கள் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்குமே வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருந்தாலும் எப்பொழுதும் போலவே விவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்.