மகர ராசி அன்பர்களே …! தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன சறுக்கல்களை சந்திக்க கூடும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வெற்றிக்கு மருந்தாகும். பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடங்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வரும். வேண்டிய தேவை ஏற்படலாம் தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். முயற்சிகள் ஓரளவு வெற்றி இருக்கும். காதலர்களுக்கும் இன்று பொன்னான நாளாக அமையும்.
வாக்குவாதங்கள் ஏதும் செய்யாமல் இருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.