Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…குழப்பங்கள் உண்டாகும்…அனுகூலம் உண்டு…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று நேர்மையாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் கொஞ்சம் ஏற்படலாம். மனைவியின் செயலால் உறவுகளே பகையாக மாறும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று வெளியூர் பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மனத்தெளிவு உண்டாகும்.

யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகளிலும் தேடி வரும். இன்று சொன்ன சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். வாக்குறுதியில் மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

காதலர்களுக்கு என்று இனிமையான நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |