மகர ராசி அன்பர்களே …! இன்று தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை கண்டிப்பாக பெறமுடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும் வெற்றியையும் நீங்கள் பெற கூடும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள் விட்டுக்கொடுத்துப் போங்கள்.
அதே போல மனதில் தெளிவு பிறக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனையும் கொடுக்கும். பயணங்கள் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
உப்புசம் போன்ற காட்சிகள் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.