மகர ராசி அன்பர்களே …! அனைவரிடமும் அறிந்து செயல்படுவீ ர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகத்தில் செல்ல வேண்டும். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். இருந்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரகூடும்.
உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். இன்று கூடுமானவரை கொஞ்சம் கவனமாக இருங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களைச் செய்யுங்கள் மிகவும் சிறப்பாகவே இருக்கும்.எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.