Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மனதைரியம் கூடும்…வெற்றி கிட்டும்…!

மகர ராசி அன்பர்களே …!     விலகிச்செல்லும் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் வருமானம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் தீர்ப்பு வந்து சேரும். எதிலும் கொஞ்சம் கோவம் அவ்வப்போது வந்து செல்லும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.

வாயு கோளாறு போன்று ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். அதனால் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகள் கூடும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்குவது கவனம் இருக்கட்டும். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

உடல் உழைப்பால் உயர்வு காண்பீர்கள். காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும். நீங்கள் நிதானத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணிகளுக்கு நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறத்தில் ஆடை அணிவது அதிஷ்டத்தையே கொடுக்கும். சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |