மகர ராசி அன்பர்களே …! முக்கிய புள்ளிகள் சந்திப்பால் முன்னேற்றம் கூடும்நாளாக இருக்கும். நிதி நிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாகவே இருக்கும். மகிழ்ச்சியாகவே காணப்படும். முடிந்தால் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலிடு மட்டும் தயவு செய்து பயன்படுத்தாமல் இருந்தால் அது போதும். காதலர்களுக்கு கொஞ்சம் பொறுமையாக தான் இருக்கவேண்டும்.
தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். கூடுமானவரை நிதானத்தை தயவுசெய்து கடைபிடியுங்கள். பேசும்பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டடால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.