மகர ராசி அன்பர்களே …! இன்று ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஆகிய பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அதிக அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலை தூக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் கவனமாகக் கையாண்டால் அது தீரும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கூட ஏற்படலாம்.
தயவுசெய்து அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள். மெத்தனப் போக்கை கைவிடுங்கள், அலட்சியப் போக்கை முற்றிலும் கைவிடுங்கள். அதேபோல உடல் ஆரோக்கியத்திலும் கவனம் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிஷ்ட நிறங்கள்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்