Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…தைரியம் கூடும்…வெற்றி உண்டாகும்…!

மகர ராசி அன்பர்களே …!     இன்று மனதில் தன்னம்பிக்கையை உருவாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பாதையை நோக்கி எடுத்து செல்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். தொழில் போட்டியில் இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் அணுகுலம் ஏற்படும். விழாவில் கலந்துக் கொள்வீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். பாக்கியத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உறவினர்களால் நல்ல செய்திகளை கேட்க கூடிய சம்பவம் நடக்கும். இன்று  முடிந்தால் குலதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். காதலர்களுக்கு இன்று மிகவும் இனிமையான நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |