மகர ராசி அன்பர்களே …! இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். அயல்நாட்டு உத்தியோகத்தில் ஆதாயம் சீராகும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகு அதில் ஈடுபடும் மனநிலை ஏற்படும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். மனதைரியம் அதிகரிக்கும். வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் கொஞ்சம் இருக்கும். மற்றவரிடம் உரையாடும் பொழுது பொறுமை காக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. தேவை இல்லாத விஷயத்தை பேசிக்கொண்டு பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம்.
காதலர்களும் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.