மகர ராசி அன்பர்களே …! இன்று ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரித்துச் செல்வது நல்லது. காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணிகள் செல்லலாம் காரியத்தடை போன்றவை கூட இருக்கும். கவனமாக இருங்கள். வீட்டை விட்டு வெளியில் தங்குவதற்கான சூழல் உருவாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று சுயமரியாதைக்காக உற்றார் உறவினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். அதேபோல தேவையில்லாத பஞ்சாயத்துகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.