Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…திடீர் மன அழுத்தம் ஏற்படலாம்…பொருளதாரம் சிறப்பாக

மகர ராசி அன்பர்களே …!    இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மாற்றும் நாளாக இருக்கும். பொருளாதார நிலை சீராகும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது ரொம்ப நல்லது. எதிர்பாராத சில இடமாற்றமும் சிலருக்கு அமையும்.

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மன அழுத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவே இருக்கும். மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார் போல் பதில் கூறுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக தான் இருக்கும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் நல்லபடியாகவே நடக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |