மகர ராசி அன்பர்களே …! கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறனை பிறர் உணர்ந்து பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை கூடும். கூடுதல் பணவரவு குடும்ப தேவையை நிறைவேற்றி வைக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக தான் இருக்க வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. இன்று வாக்குகள் கொடுக்கக்கூடாது. மிக முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போட கூடாது. என அதைவிட முக்கியமானது வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும்.
நீண்ட தூர பயணமாக இருந்தால் தயவு செய்து அதை விட்டு விடுங்கள். அது உங்களுக்கு ஓரளவு ஆபத்தை கொடுப்பதாக தான் இருக்கும். இன்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் குழப்பம் அடையாமல் காரியத்தையும் கொள்ளுங்கள். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கொஞ்சம் கடைகள் தான் இருக்கும் இருந்தாலும் கவலை இல்லாமல் காரியத்தை எதிர்கொள்ளுங்கள். மனம் ஓரளவு மகிழ்ச்சியுடன் தான் காணப்படும். ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளவேண்டும்.
வீண் செலவுகள் அதிகரிக்கும். எவ்வளவு நல்லது செய்தாலும் அவை எடுபடாமல் போகலாம். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.