மகர ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெற வழி பிறக்கும். குடும்பத்தில் குதுகலமான சம்பவங்கள் நடைபெறும் . அதிகம் செலவாகும். நினைத்த காரியம் ஒன்று குறைந்த செலவில் செய்து முடிப்பீர்கள். வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கனவுகள் தொல்லை ஏற்படலாம்.
சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை மட்டும் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகலாம் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. மற்றவரிடம் உரையாடும் பொழுது பேச்சில் நிதானம் இருந்தால் போதுமானது. பெண்களால் யோகமான சூழ்நிலையும் உண்டாகும். தன வரவில் எந்தவித குறையும் இல்லாமல் சிறப்பாக வந்து சேரும். பொருளாதாரம் சீராகவே இருக்கும். மற்றவர்களிடம் மட்டும் கொஞ்சம் விலகியே இருங்கள்.
காதலர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும். அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.