Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மனதிருப்தி உண்டாகும்…அன்பு கூடும்…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று சந்தோஷம் மிக்க நாளாக அமையும். பெண்கள் விருப்பப்படி அவர்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கலாம். கலைஞர்களுக்கு ஓரளவு வருமானம் வரக்கூடிய சூழல் அமைகிறது.  புதிய வாய்ப்புகள் தேடிவரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

தனவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவரது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றமான சூழல் இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சிறப்படையும்.இன்று குடும்பத்தில் சக மனிதர்களால் சந்தோஷம் ஏற்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். காதலர்களுக்கும் என்று இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்ல பலனையும் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |