மகர ராசி அன்பர்களே …! இன்று மனதில் புத்துணர்ச்சி பெருகும். தொழிலில் இருந்த தாமதம் விலகும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். மாமன் மைத்துனர் உதவிகளை செய்வார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். யோகமான சூழ்நிலைகள் அமையும். கோபத்தை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் வெற்றி இருக்கும். டென்ஷனை குறைத்துக் கொண்டாலே போதுமானது.
இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள் அது போதும். அதே போல மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல் உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். பெண்கள் மனதை மட்டும் கூடுமானவரை நிதானமாக வைத்துக்கொள்வதற்கு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மற்றவரிடம் உரையாடும் பொழுது கோபமில்லாமல் பேசுங்கள். வாடிக்கையாளர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள்.
அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் மட்டும் தயவு செய்து காட்ட வேண்டாம். காதலருக்கு எந்த விதத்திலும் என்று சிறப்பான நாளாக இருக்கும். முன்னேற்றம் கூடும், முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.